தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இரண்டு வகையான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் அறிவிப்பு என்னவென்றால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 வயதிலிருந்து 60 வயது நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேரவையில் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது.
அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 என்பது 60 வயது ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ,வாரியங்கள், ஆணையங்கள் ,சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவு தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு 31.5.2021 பணியிலிருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.