வீட்டில் குழந்தைகள், வயதானவர்களை கவனித்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “அமெரிக்காவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும். முழுநேர அரசு ஊழியர்கள் 600 மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 35 டாலர்கள் வாரத்திற்கு 1500 டாலர்கள் வரை சம்பளம் கொடுக்கப்படும். அமெரிக்காவின் ஒரு மத்திய அரசு ஊழியர் 15 லட்சம் வரை சம்பள உயர்வு பெற்றுக் கொள்வார்கள்.
மேலும் கொரோனா காரணமாக வீட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளிகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்களுக்கும் இதேபோல சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். பகுதி நேர ஊழியர்களுக்கும் பனி நேரத்துக்கு இணையான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். இந்த அறிவிப்பால் அமெரிக்க அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.