Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கான அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில், கொரோனா காரணமாக 59 ஆக உயர்த்தியது. தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயர்த்தபட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக அரசு இந்த முடிவை செய்துள்ளது. இந்தச் செய்தி அரசு ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தியாக இருக்கும்.

Categories

Tech |