நாம் சாப்பிடும் இஞ்சி உண்மையானதா? உண்மையான இஞ்சியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
அனைவரின் வீட்டில் சமையலறையில் இன்று கட்டாயம் இருக்கும் . உணவுகளில் மட்டுமின்றி மருந்துகளில் கூட இஞ்சி முதலிடம் தான். கொரோனா ஆரம்பத்தில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரும் இஞ்சியை டீயிலும், கசாயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது போலி இஞ்சி விற்பனை அதிகரித்து வருகிறதாம். போலியை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். போலி இஞ்சிக்கும், உண்மையான இஞ்சிக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி காண்பது?
உண்மையான அடையாளம் காண்பதற்கு முதலில் அதனை முகர்ந்து பார்க்க வேண்டும். இஞ்சியின் வாசனை கடுமையானதாக மற்றும் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
அதே சமயம் போலீசுக்கு வாசனை கிடையாது. காய்கறி விற்பனையாளர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிக்க இஞ்சி போல தோற்றமளிக்கும் மர வேர்களை விற்கின்றனர்.
இஞ்சி தோலை சரிபார்க்கவும்.. இஞ்சி தோலை நகம் மூலம் சுரண்டும் போது வாசனை வந்தால் அது நல்ல இஞ்சி. இஞ்சியில் தோல் கடினமாக இருக்காது.
பொதுவாக கடைகளில் உள்ள சுத்தமான இஞ்சியை தேர்வு செய்யாதீர்கள். பலரும் சுத்தமாக இருக்கும் இஞ்சியை தான் தேர்வு செய்கிறார்கள்.
விற்பனையாளர்கள் பெரும்பாலும் இஞ்சியை சுத்தம் செய்ய அமிலத்தை பயன்படுத்துகின்றனர். எனவே நீங்கள் அத்தகைய இஞ்சியை வாங்காதீர்கள்.