வேலை இல்லாதவர்கள் இணையத்தில் மோடி ஜாப் டூ நேற்று முன்தினம் முதல் ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே பலரும் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். தற்போது பொதுமுடக்கத்தி தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட பொருளாதாரம் மெதுவாக மீண்டும் கொண்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதால் சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் பலரும் மோடியிடம் வேலை கொடுக்குமாறு தங்களுடைய கோரிக்கையை நேரடியாக வைத்துள்ளனர்.
இதற்காக “மோடி ஜாப் டூ “நேற்று முன்தினம் முதல் ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இதில் 44 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டுவிட் செய்துள்ளனர். பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேலைகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தது எங்கே நடந்திருக்கிறது ?என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.