Categories
உலக செய்திகள்

வீட்டு வேலை செய்த மனைவிக்கு…. மாதம்தோறும் ரூ.5,62,180 …. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…!!

சீனாவில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு  வழங்கிய தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீனாவை சேர்ந்த தம்பதிகள் சென் – வேங். இதில் சென் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வேங்  என்பவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று பெய்ஜிங்கில் உள்ள ஃபாங்ஷான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு முதலில் மறுப்பு தெரிவித்த வேங் பின் விவாகரத்து தர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வேங் என்பவர் தனது கணவர் வீட்டு வேலைகளிலும், மகனைப் பார்த்துக் கொள்வதிலும் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்ததில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்து விசாரித்த மாவட்ட நீதிமன்றம் வேங்கிற்கு மாதம்தோறும் ஜீவனாம்சமாக ரூ.22,492 அதுமட்டுமின்றி இதுவரை வீட்டுவேலைகள் செய்ததற்காக ரூ. 5,62,180 கொடுக்க வேண்டும் என்று விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |