அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கட்சி குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமமுக செயற்குழு பொதுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.