அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் மட்ட ஆட்சியர் தடை விதித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு பௌர்ணமி கிரிவலம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மதியம் 3.50 மணியிலிருந்து சனிக்கிழமை மதியம் 2.45 மணி வரைக்கும் பௌர்ணமி உள்ளது.
இந்த பௌர்ணமிக்கு கிரிவலம் அனுமதி வழங்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இந்த மாதமும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்துள்ளார். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.