Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுதியில் சடலமாக கிடந்த வாலிபர்… கொடூரமாக குத்தி கொலை… சேலத்தில் பரபரப்பு…!!

விடுதியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நல்லூர் பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ஐந்து ரோடு சிக்னல் அருகே இருக்கும் தனியார் விடுதியில் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்த சரவணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சரவணன் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக ஊழியர் எட்டிப் பார்த்தபோது, சரவணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து சரவணனின் உடலை பார்த்தபோது, அவரது மார்பு பகுதியில் கத்தியால் குத்தி யாரோ அவரை கொலை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அதன்பின் அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த விடுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து சரவணனை கொலை செய்தவர்களின் விவரம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். மேலும் திருப்பூரில் வசிக்கும் அவரது உறவினர்களை தொடர்பு கொண்ட போலீசார் தகவலை தெரிவித்து எந்த காரணத்திற்காக சரவணன் சேலம் வந்தார் என கேட்டறிந்து அவரை கொலை செய்தவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |