Categories
அரசியல் மாநில செய்திகள்

”1இல்ல… 2இல்ல” 6பேரோடு பேச்சு வார்த்தை… அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பட்ஜெட்டை பார்த்தால் தமிழ்நாடு கடனில் தள்ளாடுவதாக தான் தெரியுது. கவலைப்படும் அளவிற்க்கு தமிழ்நாட்டு மக்கள் மீது கடன் சுமை அதிகமா இருக்கு. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு இருந்துச்சு, எந்த ஒரு வளர்ச்சி திட்டமும், பணியுமே நடைபெறாத நேரத்துல ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி இருக்காங்கன்னு சொல்றது, உண்மையிலேயே மக்கள் மத்தியில புருவத்தை உயர்த்த வைக்கிறது.

அதுல ஒரு வெளிப்படை தன்மை இல்லையோஎன்ற அடிப்படையில் அறிக்கை கொடுத்து இருந்தேன். இந்த காலகட்டத்துல ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரம் கோடி கடன் வந்துருக்கு.  இதெற்கெல்லாம் என்ன காரணம் ?என அரசுதான் வளக்கணும்.  வெற்றிநடை போடுதுன்னு சொல்றத விட கடனில் தள்ளாடிக்கிட்டு இருக்கு என்பது தான் உண்மையான வாக்கியமா இருக்க முடியும்.

இந்த தேர்தல் கடுமையான போட்டி இருக்கும். நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இருக்கு. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைவது  முதல் அணியாக இருக்கும். நாங்க சில கட்சிகளோட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கோம்.

முடிவுக்கு வந்த பிறகு சொல்றதுதான் நாகரிகமா இருக்கும். 5,6 கட்சிகளோடு பேசிட்டு இருக்கோம். முடிவுக்கு வந்தது சொல்லுறேன். வெற்றி வாய்ப்பு உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்.  நிறைய தொகுதிகளில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பெற்று வெல்வோம். 6 கட்சிகளோடு பேச்சுவார்த்தை என்பதால் அதிமுக கூட்டணிக்கு வாக்குவார்கள் வராதோ என டிடிவி தினகரன் பேச்சால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Categories

Tech |