சாக்லேட் குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் – 1 கப் (துருவியது)
சர்க்கரை – 1/2 கப்
பிஸ்தா – 4 (நறுக்கியது)
பாதாம் பருப்பு – 4 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை துருவி எடுத்து கொள்ளவும். பின்பு பிஸ்தா, பாதம் பருப்புகளை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, ஊற்றி, அதில் பாலை ஊற்றியபின், பால் பவுடரை சேர்த்து கட்டி இல்லாத அளவுக்கு கரண்டியால் கலந்து நன்கு கொதிக்க வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
மேலும் கொதிக்க வைத்த பால் கலவையானது, நன்கு கொதித்து கெட்டியானதும், அதனுடன் சர்க்கரை சேர்த்துசில நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் கொதிக்க வைத்த கலவையில் சர்க்கரை நன்கு கரைந்தபின், இறக்கி வைத்து, அதில் நறுக்கிய பாதாம், பிஸ்தா போட்டு, துருவிய சாக்லேட்டை சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கியபின், பிரிட்ஜில் வைத்து 1 மணி நேரம் அப்படியே வைத்து நன்கு குளிர வைக்கவும்.
பின்பு குளிர வைத்த சாக்லேட் கலவையை எடுத்து அதை மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக ஒருமுறை நன்கு அரைத்ததும் அதை எடுத்து, அதை குல்ஃபி மோல்ட்டிலோ அல்லது கிளாஸிலோ ஊற்றியபின், அதில் நடுவில் ஐஸ் குச்சியை வைத்தபின், அப்படியே பிரிட்ஜில் வைத்து 6 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் ருசியான சாக்லேட் குல்ஃபி தயார்.