Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

7-ஆம் கட்ட அகழாய்வு பணி… பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு… ஆய்வு செய்தார் தலைமை நீதிபதி…!!

கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி வந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நூல் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குழியில் மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் மணிகள், பாசிகள், பானை ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் நடைபெறும் ஆய்வு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நேற்று வந்துள்ளார்.

இவரை மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன் வரவேற்றுள்ளார். பின்னர் தலைமை நீதிபதி கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பற்றி  கேட்டறிந்துள்ளார். இதற்கு தொல்லியல் அலுவலர் பாஸ்கரன், அஜய்குமார் ஆகியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்பின் அவர் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தையும் பார்வையிட்டுள்ளார்.

Categories

Tech |