Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா காலேஜ் போக மாட்டியா… கண்டித்த பெற்றோர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ராஜா. இவருடைய மகள் இலக்கியா என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். அவர் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறையில் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இலக்கியா தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |