சீனாவில் மின்கம்பத்தில் ஏறி சிட் அப்ஸ் செய்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
உலகத்தில் உடல் மீது அக்கறைகொண்ட அனைவரும் வீட்டிலேயோ அல்லது ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். ஆனால் சீனாவின் செங்டு பகுதியை சேர்ந்த ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி அதன் உச்சிக்கு சென்று “சிட் அப்ஸ்” உடற்பயிற்சி செய்துள்ளார். இதை கண்ட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மின்சாரத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைகேள்விப்பட்ட மின்சார துறை ஊழியர் அந்த நபரின் உயிரைப் பாதுகாப்பதற்காக செங்டு மின்சாரத்தை உடனடியாக துண்டித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற ஆபத்தான விளையாட்டில் பொதுமக்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் அபபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.