நியூயார்க்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் கடந்த நவம்பர் மாதம் B.1.526 எனும் திடீர் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்தனர். மேலும் இந்த புதிய வகை தொற்று வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தபுதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளின் செயல் திறனை குறைக்கக் கூடியதாக இருப்பதாக தகவல் வெளியாகின .
இந்த வைரஸ் தடுப்பூசிகள் மூலம் செலுத்தப்படும் ஆன்டிபாடிகளுக்கு இடையூறு அளிப்பதுடன் சிகிச்சையிலும் இடையூறு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.