Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் சும்மாதானே இருந்தேன்… வழிய சென்று தகராறு… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பனங்காடு கிழக்கு பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பெத்தனூர் களக்காடு பகுதியில் வசித்து வரும் அருண்குமார் என்பவருக்கும், சுந்தருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அருண்குமார் வந்து தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த அருண்குமார் சுந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் சுந்தர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்ததாக அருண்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |