Categories
உலக செய்திகள்

தேர்வு எழுத இஷ்டம்னா எழுந்துங்க…! இல்லனா வேண்டாம் விடுருங்க… பிரிட்டன் நாட்டில் செம அறிவிப்பு …!!

பிரிட்டனில் இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு ஒரு திட்டம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி கற்கும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளட்டும். அவர்களுடைய மதிப்பெண்களை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள். தேர்வாணையங்கள் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்வார்கள். ஆனால்  அவற்றை பயன்படுத்துவதா , வேண்டாமா என்று ஆசிரியர்கள் தான் முடிவு செய்வார்கள்.

இதற்க்கு முன்பு மாணவர்கள் எழுதிய வகுப்பு தேர்வுகள் மற்றும் சிறு தேர்வுகளின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் அதற்கான மதிப்பெண்களை முடிவு செய்வார்கள். இந்த சிறு தேர்வுகளை வகுப்பில் தான் எழுதனும்  என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் வீட்டில் கூட வைத்து எழுதலாம் .இந்த ஆண்டு பிரிட்டன் மாணவர்களின் A லெவல் மற்றும் ஜிசிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |