Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எலும்புகளுக்கு அதிக சத்துகளை தரக்கூடிய தக்காளி, பட்டாணியில்… அருமையான ருசியில்… குழந்தைகளுக்கு பிடித்த சாதத்தை செய்து அசத்துங்க..!!

தக்காளி பட்டாணி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி                                   – 2 கப்
தக்காளி                             – 4
வெங்காயம்                     – 1
பட்டாணி                           – 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்             – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்                  – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                     – 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ்                 – 1 டீஸ்பூன்
உப்பு                                      – தேவையான அளவு
தண்ணீர்                              – 2 கப்
நெய்                                      – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு மையாக அரைத்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்

பிறகு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கியபின், நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கியதும், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கி கொள்ளவும்.

மேலும் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் பேஸ்ட்டாக அரைத்த இஞ்சி பூண்டு கலவையை போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கரண்டியால் நன்கு வதக்கியபின், பட்டாணியை போட்டு சில நிமிடம் நன்கு கிளறி விடவும்.

பின்னர் கிளறி விட்ட பட்டாணியானதுநிறம் மாறியபின், அதில் தக்காளி சாஸ்,ருசிக்கேற்ப உப்பு தூவியபின் நன்கு சில நிமிடம் நன்கு வதக்கியதும், சுத்தம் செய்த அரிசியை போட்டு,  மசாலா அரிசியில் நன்கு படும்படி கிளறி விடவும்.

கடைசியில் கிளறி விட்ட கலவையுடன், தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், மூடி வைத்து நன்கு வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான தக்காளி பட்டாணி சாதம் தயார்.

Categories

Tech |