Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய TV… அடுத்தடுத்து பற்றி எரிந்த 5 வீடுகள்… விசாரணையில் வெளியான தகவல்…!!

ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞானையா தெரு பகுதியில் கிறிஸ்டோபர் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 5 வீடுகள் இருக்கின்றன. இதில் கிறிஸ்டோபர் டேனியல் மற்றும் அவரது உறவினர்கள் 2 வீடுகளிலும், மீதி உள்ள மூன்று வீடுகளில் வாடகைக்கு சில நபர்களும் வசித்து வந்துள்ளனர். இவ்வாறு அங்குள்ள ஒரு வீட்டில் வசந்தகுமாரி என்பவரும், மற்ற இரண்டு வீடுகளில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்துவருகிறார்.

இந்நிலையில் அதிகாலை வசந்தகுமாரி வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. அந்த தீயானது காற்றில் வேகமாக பரவி மற்ற வீடுகளிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து காயமடைந்த வசந்தகுமாரி மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஐந்து வீடுகளில் எரிந்த தீயை அணைத்து விட்டனர்.  இதுகுறித்து வடசேரி போலீசார் நடத்திய விசாரணையில், வசந்தகுமாரின் வீட்டிலிருந்த டிவி உயர்மின் அழுத்தத்தின் காரணமாக வெடித்ததால் அங்கு தீ பற்றியது என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அனைத்து வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகியது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |