மர்மமான முறையில் திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ் திருத்தங்கல் மகாத்மாகாந்தி காலனி பகுதியில் திருநங்கை மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்ட மருதுபாண்டியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது தாயார் மருது பாண்டியனின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருநங்கையின் மரணத்திற்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.