Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“தோனி ஓய்வு எண்ணமும் உங்களுக்கு வர வேண்டாம்” பிரபல படகி உருக்கம்…!!

ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா கடுமையாக போராடினர். இந்திய அணியின் விக்கெட்டு சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி நேர்த்தியாக விளையாடி ஜடேஜா அதிரடி ஆட்டத்ற்றத்திற்கு வழி  வகுத்தார்.  ஜடேஜா ஆட்டமிழந்ததும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த தொடங்கிய தோனி துரதிஷ்ட வசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரின் அவுட்_டால் இந்தியா_வின் வெற்றி நழுவி போனது. தன்னுடைய முழு பங்களிப்போடு தோனி போராடியும் வெற்றி கிடைக்கவில்லை.

டோனி தயவு செய்து அந்த எண்ணம் உங்களுக்கு வரவேண்டாம் - பிரபல பாடகி உருக்கமான வேண்டுகோள்

இதையடுத்து கிரிக்கெட் பயணத்தில் தோனி தனது ஓய்வை அறிவிப்பார். இதோடு அவரின் ஆட்டம் முடிகின்றது என்ற கேள்வி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. இதுகுறித்து ப;யாரும் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் ,  பாடகி லதா மங்கேஷ்கர் டோனி ஓய்வு பெறுவது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் , டோனி, சில நாட்களாக நான் கேள்வி படுகிறேன். நீங்கள் ஓய்வு பெறப்போகிறீர்கள் என்று. தயவு செய்து ஓய்வு பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாட்டுக்கு உங்களோட அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு ரொம்ப முக்கியம். உங்களிடம் என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டு உள்ளார்.

 

Categories

Tech |