Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பொறுமை தேவை..! நிதானம் அவசியம்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசிப்பார்கள்.

கலை மற்றும் இசை பயன்படுத்தி பயனடைவீர்கள்.
உங்களின் வளர்ச்சிக்கு இன்றைய நாளைப் பயன்படுத்தலாம். இன்று நீங்கள் அதிக முயற்சி எடுத்து அதிக பயன் தரும் நாளாக இருக்கிறது.
இன்று உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும். புதிய விஷயங்களை என்று நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். பணி விஷயமாக வெளியிடங்களுக்கு சென்று வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையிடம் பழகும்போது நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது வழக்கத்தை காட்டிலும் பணம் அதிகரித்தே காணப்படும். இன்று உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

Categories

Tech |