Categories
உலக செய்திகள்

தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட கொடூரம்…. உயரும் பலி எண்ணிக்கை…. இந்தோனேசியாவில் சோகம்…!!

இந்தோனேசியாவில் தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் சுலாவெசி என்ற தீவில் தொலைதூர பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுரங்கத்தில் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மீட்பு படையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்தவர்கள் மூன்று பேருமே பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதுவரை சுரங்கத்தில் இருந்து 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஐந்து பே தேடப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கனிமவளங்கள் அதிகம் நிறைந்த இந்தோனேசியாவில் 2019ஆம் வருடம் இதே பகுதியில் வேறு ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |