மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் செய்யும் செயலில் திருப்தி இருக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
இதன் மூலம் பாதுகாப்பின்மை உணர்வை நீங்கள் சமாளிக்க முடியும். பணியிடத்தில் சில மேலதிகாரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதனால் சிறிது வருத்தம் காணப்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும். இன்று மனக்குழப்பம் காரணமாக தவறான முடிவுகளை எடுக்கக் கூடும். இது உறவின் இனிமையை கெடுக்கும். உங்களின் செலவுகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் உணவை சரியான நேரத்தில் உண்ணுங்கள். இதனால் அஜீரணக் கோளாறை தவிர்க்க முடியும். இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்று கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம். ஷங்கர்