Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆதரவு கொடுங்கள் , வெறுக்காதீர்கள்” சோயப் அக்தர் வேண்டுகோள்…!!

அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள் என்று இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்களை சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி , ஜடேஜா அணியின் வெற்றிக்காக போராடினார்கள். இருந்தும் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியின் தோல்வி ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Image result for சோயப் அக்தர்

இந்நிலையில் இந்தியா தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்  கூறுகையில் , இந்திய ரசிகர்களுக்கு ஒரு செய்தி என்னிடம் உள்ளது. உங்கள் அணி மிகவும் சிறப்பாக விளையாடியதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன். அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர், ஆனால் இறுதிப்போட்டியில் நுழைய முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.தயவுசெய்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள், உங்கள் அணியைத் தாக்கி பேச  வேண்டாம்  என்று ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

Categories

Tech |