கேரளத்தில் இன்று மேலும் 3, 677 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3677 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 51, 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4, 652 பேர் குணமடைந்தனர். இதுவரை 9, 92, 372 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4, 133ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.