தான் பெற்ற மகளை சிறுவயது முதலே பாலியல் பலாத்காரம் செய்துவந்த தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
44 வயதான ஒரு நபர் தனது மகளை 9 வயது இருக்கும்போது பலாத்காரம் செய்துள்ளார். இவர் ஒரு உணவு வினியோகிக்கும் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தனது மகளுக்கு 15 வயது ஆனபோது அவரை பலாத்காரம் செய்துள்ளார். அவரது மகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் தனது மகளை கடுமையாக தண்டித்து சித்திரவதை செய்துள்ளார். அந்த சிறுமி பல நாட்கள் பொறுத்து கொண்டு வாழ்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சிறுமி தனக்கு நடக்கும் கொடுமைகளை அனைத்தையும் நண்பர்களிடம் கூறியுள்ளார். பிறகு அவரது நண்பர்கள் ஆசிரியர் மூலம் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த கொடூர தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் அந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை 2013ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. அதனால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.