Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்யும் காவல் ஆய்வாளர் மகன் – சென்னையில் பரபரப்பு

சென்னை மதுரை வாயில் அருகே  கஞ்சா விற்பனை செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

அவர்களிடம் இருந்து பதினெட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . புளியம் பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி இருந்தது தெரியவந்தது.  அங்கிருந்த பதினெட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த வீட்டில் இருந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் மதுரை கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .

விசாரணையில், புளியம்பேடு பகுதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளதும், அந்த வீட்டில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை பிரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. பள்ளி , கல்லூரி மாணவர்கள்,  ஐ.டியில் பணி புரிபவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் நடைபெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெய சூர்யா, சஞ்சய், மதுரையை சேர்ந்த ஸ்ரீநாத்,  சிதம்பரம் கடவாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் குமார், சென்னை வண்டலூரை சேர்ந்த எலெக்ட்ரிசின் பிரசாந்த், திருவாரூரை சேர்ந்த சரத்குமார் , சென்னை ஆவடியை சேர்ந்த ஐந்தாவது பட்டாலியன் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் உதவி ஆய்வாளர் விஜய லதா மகனான கல்லூரி மாணவன் அருள், தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சேரன் ஆகியோர்  என்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான முக்கிய குற்றவாளிலும், கஞ்சா மொத்த வியாபாரியுமான ஹரியை போலீசார் தேடி வருகின்றனர் .

Categories

Tech |