தா. பாண்டியன் விரைவில் குணமாக வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாகப் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தா. பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன் என்று கூறியுள்ளார்.