12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் மார்ச் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 1000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.