Categories
மாநில செய்திகள்

“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …!!

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில்  உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி  பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ,  தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு  என்று குற்றம் சாட்டினார்.

Image result for கனிமொழி MP

தொடர்ந்து பேசிய அவர் , பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, மத்திய அரசு செயல்படுவதாக தமிழ் பழமொழியை சுட்டிக்காட்டி பேசி அசத்திய கனிமொழி , ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும்  என்ற கோரிக்கை வைத்ததோடு ரெயில்வே திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது தமிழகம் போன்ற மாநிலங்களில் வாழும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

Categories

Tech |