Categories
உலக செய்திகள்

நாசா அனுப்பிய 6 பேருக்கு தெரிந்த ரகசிய செய்தி… ஊரெங்கும் தெரியவந்த சுவாரஸ்யம்…!!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரில் பயன்படுத்திய பாராசூட்டில் பொறிக்கப்பட்ட ரகசிய செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாசாவின் பெர்சிவரென்ஸ் ரோவரில் உபயோகப்படுத்தப்பட்ட மிகப் பெரிதான பாராசூட்டில் ரகசிய செய்தி ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பைனரி குறியீட்டு முறையில் “Dare Mighty Things” என்ற தொடர் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டு ரகசியமாக பாராசூட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த விண்வெளி முயற்சியில் பாராசூட்டில் வித்தியாசமான வடிவத்தை பொறிக்க Lan clark என்ற பொறியாளர் விரும்பியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து Lan clark குறுக்கெழுத்து பொழுதுபோக்காக இரண்டு வருடங்களுக்கு முன் இந்த யோசனையை கூறியுள்ளார். மேலும் இதனை Lan clark “சூப்பர் ஃபன்” என்று கூறியதோடு இதை ரகசிய செய்தியாக மாற்ற மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது இந்த வாக்கியமானது அமெரிக்காவின் 26வது ஜனாதிபதி Theodore Roosvelt என்பவர் கூறிய தத்துவ வாக்கியங்களில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்நிலையில் இந்த ரகசிய செய்தியை சில மணிநேரங்களில் விண்வெளி ஆர்வலர்கள் Decode  செய்துவிட்டனர். இதனால் இனிமேல் ரகசிய செய்திகளில் மிகவும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை செய்யவிருப்பதாக Lan clarkதெரிவித்துள்ளார். மேலும் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்குவதற்கு முன் இந்த ரகசிய செய்தியானது Lan clark மற்றும் 6 நபர்களுக்கு மட்டுமே  தெரிந்திருக்கிறது. தற்போது விண்வெளி ஆர்வலர்கள் மூலமாக இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகிவிட்டது.

Categories

Tech |