Categories
தேனி மாவட்ட செய்திகள்

இறந்த பிறகும் புகழை தேடிதரும் பாடல்கள்… வறுமையில் வாடும் குடும்பம்… உதவி கோரிய பொதுமக்கள்…!!

வறுமையில் வாடி வரும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கிராமிய பாடல்களுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் 400க்கும் மேற்பட்ட கிராமிய பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் “வர சொல்லுங்க” என்ற பாடலை எழுதியவர் இவர்தான்.  தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள் எல்லா இடத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடல் நான் “அங்கே இடி முழங்குது”.

இந்த பாடல் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட பாடல். இவருக்கு ஆறு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இவருடைய மனைவி சுப்புத்தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்து வருகிறார். இவர்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதால் கலைஞர்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையை இவர்களுக்கு தரும்படி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் முதியோர் உதவித் தொகை மட்டுமே கிடைப்பதால் அதை வைத்து மாத்திரைகள் வாங்கும் முடிகின்றது என்று கூறுகின்றனர். இந்நிலையில் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் உடைய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தாலும் அவரது குடும்பத்தினர் வறுமையிலேயே இருந்து வருகின்றனர். இதனால் கலைத்துறையினர் முன்வந்து இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என தேக்கம்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |