குளத்தில் நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய நண்பரான பழனிவேல்ராஜானுடன் இவர் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு சென்றபின் லட்சுமணன் நீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பழனிவேல்ராஜாவிற்கு நீச்சல் தெரியாததால் அவர் படிக்கட்டில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல்ராஜா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
அதன்பின் அவர்கள் குளத்தில் இறங்கி லக்ஷ்மணனை மீட்டுள்ளனர். ஆனால் நீருக்குள் வெகுநேரம் இருந்ததால் லட்சுமணன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.