ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒரு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் எச்சரித்தது. மேலும் ஏற்கனவே விடுமுறை எடுத்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தது. ஆனாலும் போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னையில் இன்றும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.