Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு: ஏழைகளின் வயிறு எரிந்தால்…. அந்த நெருப்பு ஆபத்தானது – கமல் கண்டனம்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் அரசு கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் தன்னுடைய தேர்தல் பரப்புரை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கண்ணுக்கு எட்டாத தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயு தான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயும் தேவையில்லை என்று கருகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |