Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நான் சொல்லுறத செய்யுங்க… ஏமாற்றப்பட்ட ஊழியர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்று தரப்படும் என கூறி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனி மூலம் கடன் பெற்று தரப்படும் என்ற அறிவிப்பை ஆன்லைனில் பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிற்கு ஐயப்பன் தொடர்பு கொண்டு பேசியபோது நாகர்கோவிலில் வசித்து வரும் ஜீனோ என்பவர் 3 லட்சம்  செலுத்தினால் மதுரை பைனான்ஸ் கம்பெனி மூலமாக 15 லட்ச ரூபாய் கடன் பெற்று தரப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவரது வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாயை ஐயப்பன் அனுப்பிய பிறகும், அந்த நபர் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி உள்ளார். இந்நிலையில் ஜீனோவை தொடர்பு கொண்டு ஐயப்பன் கடன் விவகாரம் குறித்து பேசிய போது மேலும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே கடன் பெற்று தர முடியும் என ஐயப்பனை மிரட்டியிருக்கிறார். இதுகுறித்து ஐயப்பன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஜீனோவை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

அதன் பிறகு ஜீனோவை தேடி கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும், ஆன்லைனில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நீதிமன்றத்தில் ஜீனோவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறும்போது, கடன் வாங்கி தருவதாக வரும் இணைய வழி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |