விவசாய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழை கொள்ளை கிராமத்தில் சேரன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 10 மாதமாக இவரால் சீட்டு பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் சேரனின் வீட்டிற்கு வந்த அந்த தனியார் நிறுவன மேலாளர் சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒரத்தூர் போலீசார் சீட்டு பணம் கட்ட முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.