Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…!! ஒரே பள்ளியில் 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி… பின்னர் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே பள்ளியில் 229 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 27ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல்  பள்ளி விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு  மற்றும் Washim, Deagon-ல்  உள்ள பாவ்னா பப்ளிக் பள்ளியில் அதிகாரிகள் அங்கு பயின்று வரும் மாணவர்களை PCR  என்றழைக்கப்படும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் முதற்கட்டமாக 30 மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை  அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் பள்ளியில் படிக்கும் 327 மாணவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 229 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில்  கண்டறியப்பட்டது. இந்த 229 மாணவர்களும் 5 முதல் 9ம்  வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 4 ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் தற்போது பள்ளியிலேயே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பரி சோதனையில் எதிர்மறையான முடிவை பெற்ற 98 மாணவர்களும் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் Washim மாவட்டம்  கொரோனா அதிகமுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |