Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தக்கலை ஷேக் முஹம்மது சாகிப் தர்கா பெருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |