தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
அதன்படி விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகள் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.