ரஷ்யாவுக்காக தன் சொந்த நாடாகிய ஜெர்மனை உளவு பார்த்த பணியாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Jens F என்ற நபர் ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் உள்ள பாராளுமன்றத்தில் மின்னணு சாதனங்களின் சேவைகளை வழங்கும் ஒப்பந்ததாரராக பல ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதனால் Jens -க்கு பாராளுமன்ற கட்டிடத்தின் தள திட்டங்கள் கொண்ட file களை பார்ப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெர்மனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள உறவில் சில சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் பாராளுமன்ற தள திட்டங்கள் குறித்த தகவல்களை ரஷ்ய உளவு துறைக்கு வழங்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். பின்னர் 2017ஆம் ஆண்டில் ரஷ்ய தூதரகத்தில் உள்ள ரகசிய சேவையின் பணிபுரியும் ஒருவருக்கு இந்த தகவல்களை அவர் அனுப்பியுள்ளார் என்று வழக்கறிஞர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.