Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடையாம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் நாகரத்தினம் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் மோட்டார்சைக்கிளானது இரட்டை கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரம் நோக்கி சென்ற கார் திடீரென இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.

இந்த விபத்தில் தாய்-மகன் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகரத்தினத்தை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு மேல்சிகிச்சைக்காக காலில் முறிவு ஏற்பட்ட ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |