கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல் மீதான வரி காரணமென்று கூறிவருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மறைமுகமாக மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. இந்நிலையில் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் இடியாக விழப்போகிறது.