கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளம் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா செய்தி வலைத்தளங்களில் செய்திகள் மற்றும் அதன் லிங்குகள் இவற்றை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவ னங்கள் வெளியிடுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று புதிய சட்டத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சட்டத்திற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் என் நிறுவனம் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்த நாட்டிலுள்ள சேவைகள் அனைத்தும் நிறுத்தப் படும் என மிரட்டியது.அப்பொழுது இந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அங்குள்ள மக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு இச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் இச் சட்டத்திற்கு ஒப்புக்கொண்டது . அச்சமயம் ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்களுடன் இது தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவதில் கூகுள் மற்றும் பேஸ்புக் அதிக ஆர்வம் காட்டுகிறது. இதை அறிந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றன என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதில் முன்னதாக நடந்த பேச்சுவார்த்தைகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது அப்பொழுது ஃபேஸ்புக் சுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள செய்திகள் அனைத்தையும் தனது பக்கங்களில் வெளியிடுவதை நிறுத்திவிட்டது. அதன் பின்னர்புதிய விதிமுறையின்படி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஒரு அரசாங்க நடுவர் நிர்ணயிக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா விளங்குகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் பேஸ்புக் அவற்றில் பக்கங்களில் தோன்றும் செய்தி உலகத்திற்கும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் ஜோஷ் ப்ரை டென்பர்க், ஸ் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பால் பிலெட்சர் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரியாவின் பொதுநலன் சார்ந்த சேவைகளை வழங்கும் செய்தி ஊடக நிறுவனங்கள் அதிக வருமானத்தை பெறுகின்றன.இவ்வகையில் அவை உருவாக்கும் உள்ளடக்கத்திற்கு நியாயமான வருமானம் கிடைப்பதை இந்த புதிய சட்டம் உறுதி செய்யும் எனவும் அமல்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் அறிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா இந்தச் சட்டத்தை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பொது ஆலோசனையின் பின்னர் உருவாக்கினர்.இதுபோன்ற சட்டங்களை திட்டமிடும் நிலையில் பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் இந்நாடு உள்ளது.