Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டியின் ‘3:33’… படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… செம மாஸ் அறிவிப்பு…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் சாண்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார் . தற்போது சாண்டி ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் , சரவணன் ரேஷ்மா ஆகியோரும் நடித்து வருகின்றனர் .

சாண்டி

இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனரும் , நடிகருமான கௌதம்மேனன் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் இந்த படத்தை தயாரிக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது .

Categories

Tech |