கடலில் சவப்பெட்டிகள் மற்றும் சிதைந்த உடல் கழிவுகள் மிதந்துகொண்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தளம் காமோக்லி. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கடல் ஓரத்தில் மலைக்குன்றில் ஒரு கல்லறை தோட்டம் இருந்துள்ளது. இந்த கல்லறைத்தோட்டமானது மலைக்குன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக கடலுக்குள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் கல்லறை தோட்டம் சரிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது.
இதை பார்த்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதிலிருந்து சவப்பெட்டிகளும், மற்ற சிதைவுகளும் மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது. இதையடுத்து தற்போது சவப் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.