திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பக்கத்தில் உள்ள ஏகாம்பரம் நல்லூர் என்ற பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் ஐடிஐ படித்து முடித்துவிட்டு எலக்ட்ரிஷன் ஆக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் படித்த பெண்ணோடு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்ற போது, நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.
மேற்படிப்பு படிக்கப் போகிறேன் என்று கூறி மறுத்துள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் விடாப்பிடியாக திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதையடுத்து மணமகன் வீட்டார்கள் திருமண மண்டபத்திலிருந்து சென்றுள்ளனர். மணமகளின் இந்த திடீர் முடிவுக்கு படிப்பு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமோ? என்று தெரியாத நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.