Categories
சினிமா தமிழ் சினிமா

உரிய நேரத்தில் உழைப்புக்கு கிடைத்த வெற்றி… ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறந்த நடிகைக்காண விருது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக இந்த 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா அரங்கேறியது. இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்களுக்கான போட்டியில் லேபர், கல்தா, சூரரைப்போற்று. பொன்மகள் வந்தாள் .மை நேம் இஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, மழையில் நனைகிறேன் , சியான்கள், காளிதாஸ்,க/பெ ரணசிங்கம் ,கன்னி மாடம் ஆகிய 13 படங்கள் பங்கேற்றது .

அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த  க/பெ ரணசிங்கம் எனும் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இவரின் இந்த விருதுக்கு சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்களும் அவர்களின் ரசிகர்கள்  பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |