நடிகர் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓமண பெண்ணே’ படத்தின் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார் .
நடிகர் ஹரிஸ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் . இவர் பொறியாளன், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது நடிகர் ஹரிஸ் கல்யாண் இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ‘ஓமண பெண்ணே’ படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் .
Happy to release the #LazySong from #OhManapenne https://t.co/oSlARDyYm0
All the best to @iamharishkalyan @priya_Bshankar @KaarthikkSundar @Composer_Vishal & team
— Dhanush (@dhanushkraja) February 26, 2021
மேலும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்மூடி கிடக்கானே பையா’ என்ற பாடலை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .